மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவவும் வளர்ச்சி ஏற்படவும் இந்த சட்டப்பிரிவை நீக்குவது அவசியமாக இருந்ததாக மத்திய அரசுத் தரப்பில் புதிய பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீரிலும் இதுவரை காணாத அமைதியான சூழல் நிலவுவதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் தூண்டுதலால் வீதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்கள் கடந்தகாலமாகி விட்டதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தொடங்குகிறது.