விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எத்தனாலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபாடு,எரிபொருள் இறக்குமதி குறைவதுடன் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பயனடைவர் என்று தெரிவித்தார்.
சராசரியாக 60 சதவீதம் எத்தனால், 40 சதவீதம் மின்சார பயன்பாடு வாகனங்கள் இயக்கப்பட்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கட்கரி கூறினார். இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடப்படும் 16 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளுக்கு வீடுகளுக்கு செல்லும் என்றும் குறிப்பிட்டார்.