நாகாலாந்தில் நிலச்சரிவு காரணமாக உருண்டு வந்த பாறைகள் சாலையில் நின்ற கார்களை சின்னாபின்னமாக்கின.
விபத்து நடந்த இடம் பஹலா பஹார் என்றும் இங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ தெரிவித்துள்ளார்.
திமாபூர் மற்றும் கோஹிமா இடையே மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராட்சத பாறை உருண்டு கார்களை நசுக்கி சின்னாபின்னமாக்கியது. இதில் ஒரு கார் முற்றிலும் நசுங்கிய நிலையில் மேலும் இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவரும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.