பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்லவிருக்கும் நிலையில், இந்திய ராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும், அணிவகுப்பில் ரபேல் விமானங்களும் வர வேண்டும் என்றும் பிரான்சுக்கான இந்தியத் தூதர் லெனாயின் கோரியுள்ளார்.
வரும் 14ம் தேதி பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட நாளாக பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்சுக்கும் இந்தியாவுக்குமான நட்புறவின் வெள்ளிவிழா ஆண்டாகவும் இது அமைந்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னிலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.