தலைநகர் டெல்லியில் காய்கறிகளின் விலை ஒரே வாரத்தில் இருமடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய அவர்கள், மே மாதம் முதல் வாரத்தில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
எப்போதும் இலவசமாக வழங்கப்படும் கொத்தமல்லி தற்போது கிலோ 300 ரூபாய் என்று குறிப்பிட்ட வியாபாரிகள், இஞ்சி கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தக்காளி விலை உயர்வுக்கு கனமழையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரே வாரத்தில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்த வியாபாரிகள் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.