டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேல் மர்ம டிரோன் பறந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் இல்லத்தின் மேல் இன்று அதிகாலை 5 மணியளவில் டிரோன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் இல்லத்திற்கு அருகே மர்ம டிரோன் பறக்கவிடப்பட்டது தொடர்பாக பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, அதிகாலை 5:30 மணிக்கு டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் நடத்தப்பட்டப்பட்ட போதிலும், சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரியவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.