கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் மது பாட்டில்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவாவிலிருந்து புறப்பட்ட லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அந்த 3 பேர் ஏலூர் மாவட்டம் கைகளூர் ரயில் நிலையத்தில் 24 கைப் பைகளுடன் இறங்கினர்.
இதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில், உள்ளே மொத்தம் 2 ஆயிரத்து 949 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு நாலரை லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.