இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதன் விளைவாக சார்மைல்-சாட்மைல் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.. இந்தப் பாதையில் போக்குவரத்து சீரடைய சில நாட்களாகும் என்று கூறப்படுகிறது.
இதே போல் காமாண்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்டி-குலு இடையிலான பாதையும் மூடப்பட்டுள்ளது. இன்று அந்தப் பாதை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமாச்சலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஜேசிபி இயந்திரம் பொருந்திய வாகனத்தின் உதவியோடு மீட்கப்பட்டன.