எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைய வேண்டுமானால் மூன்றாவது முறையாக ராகுல்காந்தியை முன்னிறுத்தமாட்டோம் என காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கவேண்டும் என்ற புதிய நிபந்தனையை ஆம் ஆத்மி கட்சி விதித்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நின்றால் மட்டுமே எதிர்க்கட்சி கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் புதிய நிபந்தனையை கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கரின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.