மணிப்பூரில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக நீடிக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர 24ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில், தற்போதயை நிலவரம் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் மாநில அரசின் மீதுமக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.