கான்டாக்ட் லிஸ்ட் எனப்படும் தொடர்புப் பட்டியலில் இல்லாத மற்றும் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ் அப் அழைப்புகளை தானாக சைலண்ட் செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கான சோதனை முயற்சி பீட்டா வெர்ஷன்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாக எழுந்த புகாரின்பேரில், வாட்ஸ் அப் நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய அப்டேட், வாட்ஸ் அப்-பை மேலும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு ஏற்றதாக்கும் எனவும் பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.