சர்வதேச அளவில் உரங்களுக்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வழிகளை கண்டறிய வேண்டும் என ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஜி-20 வேளாண் பணிக்குழுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது, உலகளவில் வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டு நடவடிக்கை அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றத்தால் அதிகமான மழை, சுட்டெரிக்கும் வெயில் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
இந்தியாவில் மண்ணிற்கு புத்துயிர் அளிப்பதில் கவனம் செலுத்தும் விவசாயிகள், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல், இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.