குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி புயலின் பாதிப்புகள் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
புயல் காரணாக கிர் வனப்பகுதியில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் பாதுகாப்பு குறித்தும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 40 சிங்கங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்ட சிங்கங்கள் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.