மத்திய அரசின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, உள்நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்களை 60 சதவீதம் வரை விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன.
பல்வேறு விமான நிறுவன உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் ஆலோசனை நடத்தினார். விமான கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், கட்டணங்களை சீராக வைத்திருத்தல் வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார்.
உள்நாட்டு விமான கட்டணங்கள் 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டாலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை . சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு, கொரோனா மற்றும் உக்ரைன்- ரஷ்யா போரால் விநியோகத்தில் ஏற்பட்ட தடை ஆகியவையே இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.