இந்தியாவின் தலைமையிலான ஜி 20 கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது உக்ரைன் போர், ஒரு நிழல் போல, ஜி 20 நாடுகளின் மீது, கவிழும் போதும்,அனைத்து நாடுகளும், இந்தியாவின் கொள்கையின் படி, அரசியலை மறந்து, வளர்ச்சியை இலக்காக வைத்து, ஒற்றுமையாக செயல்படுவதாக, ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த மாநாட்டின் தீர்மானத்தில் உக்ரைன் பற்றிய பகுதிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து ரஷ்யா அதிலிருந்து விலகிக் கொண்டது. இந்தக்கூட்டம் மற்றும் அதன் பிரகடனத்தில் உக்ரைன் பற்றிய குறிப்புகளை நீக்க வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தியுள்ளது.