ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ அதிகாரிகள், விபத்து நடைபெற்ற பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல் வைத்தனர்.
அங்கு எந்த ரயிலும் நிற்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தின் குறிப்பேடு உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் சிஸ்டம் சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாலசோர் மாவட்டத்தில் அனைத்து ரயில் தடங்களும் சீரமைக்கப்பட்டதாகவும் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.