மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷண் தவறாக நடந்துகொண்டது உண்மை என சர்வதேச மல்யுத்த போட்டிகளின் நடுவர்களில் ஒருவரான ஜக்பீர் சிங் கூறினார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், மல்யுத்த வீராங்கனைகளிடம் மதுபோதையில் பலமுறை பிரிஜ் பூஷன் அத்துமீறலில் ஈடுபட்டதை தானே கண்ணால் பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
அனைத்து குற்றச் சாட்டுகளையும் பிரிஜ் பூஷண் மறுத்திருப்பதைப் பற்றி கேட்டதற்கு, திருடன் எப்போதாவது தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வானா என்று அவர் எதிர்கேள்வி எழுப்பினார்.
பாலியல் புகார் தொடர்பாக வரும் 15-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளித்திருந்ததை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நடுவர் ஜக்பீரின் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.