நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 50 சதவீத அளவுக்கு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து அந்த நோட்டுகளை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், வங்கிகளுக்கு மீண்டும் திரும்பி விட்டதாக கூறினார். மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இது 50 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.