இந்தியப் பெருங்கடல் வழியாக இரு கப்பல்களில் கடத்தப்பட்ட 7 டன் போதைப் பொருளை இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது.
எச் எம் எஸ் லான்காஸ்டர் என்ற இங்கிலாந்து கப்பல், அமெரிக்கக் கடற்படையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற ஒரு கப்பலை மடக்கி சோதனை நடத்தினர். அதில் 3 ஆயிரத்து 500 கிலோ ஹாஷிஷ், ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் அடுத்த சில மணி நேரத்திற்குள் மற்றொரு கப்பலிலும் இருந்து டன் கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 10 மில்லியன் யூரோக்கள் என்று கூறப்படுகிறது.