டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியது.
தரையிறக்கப்பட்ட பயணிகளுக்கு தேவை யான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் பயண இலக்குகளை சென்றடைவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.