ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர் யஷ்வந்த்புரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலின் சில பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரவு 7 மணியளவில் தடம் புரண்டன. இதில் இரண்டு பெட்டிகள் அருகில் இருந்த இணை தண்டவாளத்தின் மீது சரிந்தன.
அப்போது மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி நேற்று பிற்பகலில் புறப்பட்ட கொரமண்டல் விரைவு ரயில் எதிர்த் தடத்தில் வந்து கொண்டிருந்தது.
வேகமாக வந்த கொரமாண்டல் ரயில், தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதியதில் 12 பெட்டிகள் கவிழ்ந்தன. சில பெட்டிகள் அங்கு நின்று இருந்த சரக்கு ரயில் மீதும் மோதின.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, மூல காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.