சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, மும்பை மருத்துவமனையில் இடதுகால் மூட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐ.பி.எல் முழுவதும் முழங்கால் வழியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ்பேக் வைத்து சமாளித்து விளையாடினார். ஐ.பி.எல் தொடரில், சி.எஸ்.கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கையோடு அமதாபாத்தில் இருந்து மும்பை சென்ற தோனிக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.