மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைதூக்கியதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட 40 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் என். பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் வருகை தரும் நிலையில் சில இடங்களில் வன்முறை பரவியது.அமைதியை நிலைநிறுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் ராணுவத்தினரை ஆயுதமேந்திய கூகி பயங்கரவாத கும்பல்கள் தடுத்து நிறுத்தியதால் சுமார் ஆறு இடங்களில் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பதற்றம் மிக்க 38 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்