மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பணியில் நீடித்து வந்த முட்டுக்கட்டைகளை தமது அரசு நீக்கிவிட்டதாக மகாராஷ்ட்ர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த உத்தவ் தாக்கரே கூட்டணி அரசின் போது புல்லட் ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்ததாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகள் அனைத்தும் தமது ஆட்சியில் நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதே போல் தமது தலைமையிலான சிவசேனா-பாஜக அரசு, மெட்ரோ கார் ஷெட்டுக்கான ஆரே நிலப் பிரச்சனையைத் தீர்த்து, மெட்ரோ திட்டங்களையும் அமல்படுத்தி வருவதாகவும் ஷிண்டே தெரிவித்தார்.