உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து காணொளி வாயிலாக பச்சைக் கொடியை பிரதமர் அசைத்ததும் வந்தே பாரத் ரயில் தனது பயணத்தை துவங்கியது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகள் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதுடன், மக்களின் பயண நேரத்தை வெகுவாக குறைப்பதாகவும் தெரிவித்தார்.
டேராடூன் - டெல்லி இடையிலான 314 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 45 நிமிடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 5-ஆவது வந்தே பாரத் ரயில் சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது.