சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி தீப்பற்றியதில் முதியவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. டைம் பாம்மாக மாறிய சைனா செல்போன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
பெரியவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் டைம்பாம் போல வெடித்து தீப்பற்றிய காட்சிகள் தான் இவை..!
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த எலியாஸ் என்ற 70 வயதான முதியவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சட்டப் பையில் வைத்திருந்த செல்போன் ஒன்று டமார் என்ற சத்ததுடன் பட்டாசு போல வெடித்து தீ பற்றி எரிந்தது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது சட்டை கருகியது, சுதாரித்துக் கொண்ட செல்போனை எடுத்து வெளியே வீசினார். இதனால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்த நிலையில் டீ மாஸ்டர் ஓடி வந்து செல்போன் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்த நிலையில், கடைக்கு வெளியே ஒருவர் குறு குறுவென பார்த்தபடியே அசராமல் அமர்ந்திருந்தார்
ஒரு வருஷத்துக்கு முன்பு, விலைமலிவாக இருக்கின்றதே என்று ஆயிரம் ரூபாய்க்கு ஐ டென் என்ற சைனா செல்போனை வாங்கிய எலியாஸ், அதனை நீண்ட நேரம் சார்ஜ் போட்டு தனது பாக்கெட்டில் வைத்திருந்த நிலையில் செல்போனின் பேட்டரி வெடித்தது விசாரணையில் தெரியவந்தது
விலை குறைவாக இருக்கின்றது என்று சைனா தயாரிப்பு செல்போன்களை நாடிச்செல்வோர் அதன் தரத்தை பற்றி தெரியாமல் வாங்கி பயன்படுத்தினால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த செல்போன் டமார் சம்பவம் ஒரு உதாரணம்.