பேருந்தில் பயணித்த நடிகை ஒருவரிடம் ஆபாச சேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் காவல் நிலையம் அழைத்துச்சென்ற போது நடத்துனர் பிடியில் இருந்து அந்த தாடி வைத்த கேடி இளைஞர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அந்த பேருந்தில் நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா பயணித்துக் கொண்டிருந்தார். அந்த பேருந்தில் அங்கமாளியில் ஏறிய கோழிகோட்டை சேர்ந்த சாவத் என்ற இளைஞர் , இருக்கையில் அமர்ந்ததும் நடிகை நந்திதாவை நோக்கி ஆபாச கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது
சிறிது நேரம் பொறுத்துக் கொண்ட நந்திதா திடீரென எழுந்து அவரிடம் தகராறு ஈடுபட்டார். தன்னை நோக்கி இளைஞர் ஆபாசமாக நடந்து கொண்டது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் புகார் தெரிவித்தார்.
அவர் சொல்கிற படியெல்லாம் ஆபாசமாக நடந்துகொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்தார் சாவத் என்கிற அந்த தாடி பையன்.
அதைத் தொடர்ந்து காவல் நிலையம் அருகே பேருந்து நிறுத்திய போது அவரை நடத்துனர் காவல் நிலையம் அழைத்துச்சென்ற நிலையில் வழியில் இளைஞர் சாவத் கையை தட்டி விட்டு தப்பி ஓடினார்
விரட்டிச்சென்று ஓட்டுனரும் நடத்துனரும் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் . நெடும்பாசேரி போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை அழகாக இருந்ததால் அப்படி நடந்து கொண்டதை இளைஞர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து இளைஞர் சாவத்தை போலீசார் கைது செய்தனர்