மேக்னக்ஸ், மேக்னக்ஸ் ஃபோர்ட், ஜோஸின், மேக்னமைசின் ஆகிய 4 உயிர்காக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களுக்கு ஃபைசர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த மருந்துகளைத் தயாரிக்கும்போது நேர்ந்த குறைபாடுகளால் அவற்றை நோயாளிகளுக்கு, குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க வேண்டாம் எனவும், மருந்தகங்களில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் ஃபைசர் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னனி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஃபைசரின் இந்த மருந்துகள் குஜராத்தின் வதோதராவில் இயங்கிவரும் அஸ்ட்ரல் ஸ்டெரிடெக் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டுவந்தன.
அப்போது நேர்ந்த தரக்குறைப்பாடுகளைத் தொடர்ந்து, அந்நிறுவனம் வைத்த கோரிக்கையின் பேரில், இந்த 4 மருந்துகளையும் திரும்பப்பெறப்போவதாக ஃபைசர் அறிவித்துள்ளது.