கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 நாட்களாகியும் யார் முதலமைச்சர் என்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையே சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று இரவு பெங்களூருவில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் முறைப்படி முதலமைச்சர் குறித்து அறிவிக்கப்படும் என்றும், பின்னர் ஆளுநரிடம் ஆட்சிகோர உரிமை கோரியபின் வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.