போதைப் பொருள் வழக்கிலிருந்து ஷாருக்கான் மகனை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக புகாருக்கு ஆளான போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடேவின் மீது சிபிஐ முதல் குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் கேட்டு, 18 கோடி ரூபாயில் பேரம் முடிவடைந்து அதில் 50 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டதாக வான்கடே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வான்கடேயின் வெளிநாட்டுப் பயணங்கள், விலை உயர்ந்த வாட்சுகள் உள்ளிட்ட உடைமைகள் குறித்தும் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.