உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
ஆலைக்கு வெளியே கொட்டப்பட்ட கழிவு அட்டைகள், பாலத்தீன் கவர்கள் போன்றவற்றில் தீப்பிடித்து அது பயங்கர சூறாவளி காற்றுவீசியதன் காரணமாக தீப்பிடித்த குப்பை ஆலைக்குப் பறந்து தீப்பிடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
5 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் லாரிகள் போன்றவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள் குவியல் குவியலான குப்பைகளை புல்டோசர்களை வைத்து அகற்றினர்.இந்த விபத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.