கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. பிற்பகலுக்குள் 224 தொகுதிகளின் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்...
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மதசார்பற்ற ஜனதாவும் போட்டியிட்டதால் மும்முனைப் போட்டி நிலவியது.இத்தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
73 புள்ளி 19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 36 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.இதற்காக வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
113 இடங்களைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.இத்தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே குறுகிய வித்தியாசம் காணப்படுவதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.