ராஜஸ்தானில் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரை பேச விடாமல் முழக்கமிட்ட பார்வையாளர்களை பிரதமர் மோடி கையசைத்து அமைதிப்படுத்தினார்.
அம்மாநிலத்தில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுத் தொடங்கியதும் கூட்டத்தினர் மோடி மோடி என்று முழக்கமிட்டனர்.
முதலமைச்சர் பேசும்போது யாரும் குறுக்கிட வேண்டாம் எனத் தெரிவிக்கும் வகையில், அவர்களைப் பார்த்து கையசைத்து அமைதியாக இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தினர் தொடர்ந்து முழக்கமிட்டதால், சபாநாயகர் சி.பி.ஜோஷியை அழைத்து பார்வையாளர்களை அமைதிப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.