நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோ ஃபர்ஸ்ட் விமானநிறுவனம் மே 12ம் தேதி வரை விமானசேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தில் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ள அந்நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சமயற்றத் தன்மையில் காணப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதிக்கு ஆளாகினர்.
பயணிகளுக்கு கட்டணம் முழுவதும் திருப்பித் தரப்படும் என்று கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மே 3ம்தேதி முதல் 3 நாட்களுக்கு விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்த அந்நிறுவனம் தற்போது 12ம் தேதி வரை நீட்டித்துள்ளது.