மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 24 வகையான விலையுயர்ந்த மாம்பழங்களை தனது தோட்டத்தில் வளர்த்துவரும் விவசாயி ஒருவர், மாம்பழங்களின் காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு நாய்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நான்கு பாதுகாப்புக்காவலர்களை நியமித்துள்ளார்.
ஹுனாஉதா கிராமத்தை சேர்ந்த சங்கல்ப்சிங் பரிஹார் என்பவரின் தோட்டத்தில், 8 சர்வதேச மாம்பழ வகைகளுடன், 20-க்கும் மேற்பட்ட இந்திய மாம்பழ வகைகளையும் நட்டுள்ளார்.
இதில், ஜப்பானின் மியாசாகி மாம்பழம் உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாக அறியப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழம் இந்திய மதிப்பில் இதன் விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாகும்.
கடந்த முறை பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியால் திருட்டு சம்பவங்கள் நடந்தன. எனவே, 24 மணிநேரமும் மாம்பழங்களை பாதுகாக்க சங்கல்ப்சிங் உயர் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்.