சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக டெல்லி உள்ளிட்ட 19 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள Water and Power Consultancy Services Limited என்ற பொதுத் துறை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக மேலாளராக இருந்த ராஜேந்திர குமார் குப்தா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, ராஜிந்தர் குமார் குப்தாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 20 கோடி ரூபாய் ரொக்கப்பணம், குற்ற ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.