ஐநாவில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், ஐநா.சபை அதனை ஏற்க மறுப்பதால், பலதரப்பு நாடுகளின் பிரதிநிதித்துவம் என்ற இலக்கு பலவீனம் அடைந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டொமினிக்கன் குடியரசு வெளியுறவு அமைச்சகக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர்,பல்வேறு நாடுகளின் பிரதிநிதித்துவத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அதன் மூலமாகத்தான் உலகளாவிய ஒழுங்கை உருவாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.
சர்வதேச சவால்களுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியாவின் தலைமையிலான ஜி 20 கூட்டமைப்பு கவனம் செலுத்திவருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்