சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
தண்டேவாடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் சுரங்கம் அமைத்து ஆழத்தில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கண்ணி வெடியை அகற்றும் போது, மாவோயிஸ்ட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிபொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு 40 முதல் 50 கிலோ வரை வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.