கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தர்மய்யா தனது மனைவி லட்சுமி மற்றும் மூன்று வயது குழந்தையுடன், கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிபுத்தூரில் உள்ள மாந்தோப்பில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குழந்தையுடன் சென்ற தர்மய்யா, தனது மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்துவிட்டதாக தனது சகோதரியிடம் கூறிவிட்டு தலைமறைவானார். தர்மய்யாவின் சகோதரி அளித்த தகவலின் பேரில் பாதிரிவேடு போலீசார், லட்சுமியின் சடலத்தை தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.