பொழுதுபோக்கு, விவசாயம், வானிலை உள்ளிட்ட பல தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வானொலி நிலையங்களும் முக்கிய பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில், அகில இந்திய வானொலி நிலையத்தின் 91 எஃப்.எம் டிரான்ஸ்மிட்டர்கள் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், இந்த எஃப்.எம் சேவை எல்லை மாநிலங்களின் 85 மாவட்டங்களில் உள்ள 2 கோடி மக்களுக்கு அன்பளிப்பு எனக் குறிப்பிட்டார். மேலும், எஃப்.எம் மற்றும் டிடிஹெச் ஆகியவை எதிர்கால டிஜிட்டல் இந்தியாவிற்கான சாளரமாக விளங்குவதாக பிரதமர் தெரிவித்தார்.