எல்லை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்க் ஃபூ (Li Shangfu) பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீன அமைச்சர் டெல்லி வந்துள்ளார். இந்நிலையில், ராஜ்நாத் சிங்கை சந்தித்த அவர், இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர். அதில், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்தும், இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எல்லையில் அமைதிக்கு வித்திடுவதன் மூலமே இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த முடியும் என்றும், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார