கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளைக் கொடுத்து உதவியதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வடஅமெரிக்க நாடான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இருநாட்டுத் வர்த்தகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது, கோவிட் காலத்தில் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளும், 150 நாடுகளுக்கு மருந்துகளும் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்திய மருந்து உற்பத்தித் துறை போன்றவற்றில் கொலம்பியா முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருமாறும் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.