டிஜிட்டல் இந்தியாவை அறிமுகப்படுத்தும் போது எதிர்க்கட்சியினர் கேலி செய்ததாகவும் ஆனால் இன்று சின்ன சின்ன பெட்டிக்கடைகள் மற்றும் டீக்கடைகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய மோடி, இந்தியாவின் கடந்தகாலங்கள், நிகழ்காலங்களை குறிப்பிட்டு எதிர்காலத்துக்கான தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறி வருவதை சுட்டிக் காட்டிய மோடி, உலகின் மிகப் பெரிய நாடுகள் கூட வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறினார்.
தடுப்பூசி உற்பத்தியில் உள்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தது, ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியது உள்பட கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த புரட்சிகரமான மாற்றங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்