எல்லையோர கிராமங்கள் நாட்டின் கடைசியல்ல; அவைதான் முதல் கிராமங்கள் என்ற பிரதமர் மோடியின் கூற்றை உத்தரகாண்ட் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது.
அதாவது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் சாமோலி கிராமத்தில் பேசிய மோடி, எல்லையோர கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல, அவை நாட்டின் முதல் கிராமங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் உத்தரகாண்ட் மாநில எல்லையோரத்தில் உள்ள மானா என்னும் கிராமத்தின் பெயர், ”முதல் இந்திய கிராமம் மானா” என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அந்த பெயர்ப் பலகைப் படத்தை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.