சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் முடிந்தவரை விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்பவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாக கூறி தெலுங்கானா அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், அரசியலமைப்புச் சட்டத்தின் 200 வது பிரிவினை சுட்டிக்காட்டி, சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்பவேண்டுமென உத்தரவிட்டது.