கேரள மாநிலம் கொச்சியில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ படகு சேவையை பிரதமர் மோடி நாளை மறுநாள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன், 747 கோடி ரூபாய் செலவில் கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனை மாநிலத்தின் கனவுத் திட்டம் என வர்ணித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைக்கு உற்சாகமான காலம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் பெட்டிகளில் உள்ள அனைத்து வசதிகளும் வாட்டர் மெட்ரோவிலும் கிடைக்கும் எனவும், ஒவ்வொரு படகிலும் 50 பேர் அமரும் வசதியுடன் 100 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.