முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட kamikaze டிரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதற்கான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை சோலார் இண்டஸ்ட்ரீஸ் நாக்பூர் நிறுவனம் பெற்றுள்ளது.
15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கவல்ல 400 டிரோன்களை கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் ஒப்பந்தம் கோரியது.
இந்நிலையில் அவசர விதிகளின்படி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஓராண்டுக்குள் 400 டிரோன்களை தயாரித்து ராணுவத்திற்கு சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
இதுபோன்ற டிரோன்கள் இஸ்ரேல், போலந்து நிறுவனங்களிடம் இருந்து இதுவரை பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.