உத்தரகண்ட் மாநிலம் கர்சலி கிராமத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று யமுனாதேவி சிலை வீதியுலா நடைபெறும். இதன்படி நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி கலந்து கொண்டார். அப்போது அம்மன் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.