உலக அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் காலம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 16-வது தேசிய குடிமைப்பணிகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். பின்னர் அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர், சாமானிய மக்களின் ஆசைகளை நிவர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் ஆதரவு தர வேண்டும் என அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் பரிவர்த்தணைகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும், இந்தியாவில் மலிவான மொபைல் டேட்டா கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். முந்தைய அரசின் கொள்கை முடிவால், தலா 4 கோடிக்கும் மேலான போலி எரிவாயு இணைப்புகளும், போலி ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட்டதாகவும், 30 லட்சம் இளைஞர்களுக்கு போலியாக உதவித்தொகை அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் விமர்சித்தார்.