வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.
நாட்டின் வடமேற்கு பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஆனால் நேற்றுவரை வெப்பம் தணியவில்லை. உத்தரப்பிரதேசத்தின் ஹமிர்புர், பிரயாக் ராஜ் நகரங்களில் வெப்ப நிலை 44 புள்ளி 2 டிகிரி செல்சியசாக உச்சம் தொட்டது.
பீகார், ராஜஸ்தான் மாநிலங்களிலும் 40 டிகிரியைக் கடந்தது. அடுத்துவரும் சில நாட்களுக்கு இதே போன்ற வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் என்று வானிலைஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.